நண்பர்களே நலம் விரும்பிகளே நீண்ட இடைவேளைக்குப்பின் உங்களை சந்திக்கிறேன், கடந்த பதிவுகளை பார்த்து வாழ்த்துக்கள் கூறியவர்களுக்கும் மேற்கோள் காட்டியமைக்கும் மிக்க நன்றியை தெரியப்படுத்துகிறேன்!
இந்தப்பதிவை எழுத தூண்டிய சில ஆசிரியர்களை வணங்கி!
மாதா
பிதா
குரு
தெய்வம்
தெய்வத்துக்கு கூட நான்காவது இடம் தான்,
நம்மை ஈன்றெடுத்த தெய்வங்களுக்கு அடுத்து குருவை வைத்துள்ளனர். இந்தப் பதிவில் உள்ள எழுத்துக்கள் உருவாக காரணியாக இருந்த ஆசிரியர்களை வணங்குகிறேன் ! சமுதாயத்தில் உள்ள சாதாரண குடிமகனை சான்றோனாக மாற்றுவது இந்த ஆசிரியப் பெருந்தகைகள் தான்!
ஆசிரியர் தின வரலாறு :
ஆசிரியர் தினம் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு தேதியில் கொண்டாடப்படுகிறது, நம் தேசத்தின் இரண்டாம் குடியரசு தலைவரான திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினமாக கடைப்பிடித்து வருகிறோம்.
எனது பள்ளி வயதில் இந்நாளில் ஆசிரியர்களுக்கு விழா எடுத்து கொண்டாடிய நினைவுகள் வந்தாடுகிறது! மிகச்சரியாக சொல்லப்போனால் september 5, 2005 ல் நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த போது என்னுடைய ஆசிரியப் பெருமக்களுக்கு நாங்கள் எடுத்த ஆசிரியர் தின விழா இன்று என் கண் முன்னே நிற்கிறது!
நம் வாழ்நாளில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியை ஆசிரியருடன் தான் செலவிடுகிறோம். இன்று மேன்மையடைந்த பல விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் இன்னும் பல சிற்பங்களை செதுக்கிய உளிகள் தான் இந்த ஆசிரியர்கள்! ஒரு நாடு சிறந்த தன்னிறைவு பெற்ற வல்லமை பெற்ற நாடாக திகழ அதன் அனைத்து துறைகளிலும் முன்னிலை பெற வேண்டும், அவ்வாறு திகழ அதன் நாட்டின் மூலதானமான மனித வளத்தை மேம்படுத்துவது தான்.
அப்படி இந்த நாட்டின் பெரும்பாலான மனித வளத்தை பயணிக்க வைப்பது இந்த ஆசிரியர்கள் தான்
!
எனது பத்தாம் வகுப்பாசிரியரை என் நாடி உள்ள வரை மறக்க இயலாது.! 'உன் வேலையில் நீ சரியாக இருந்தால், யாருக்கும் நீ அஞ்சத் தேவையில்லை' என்ற பொன்மொழியை என்னுள் புகுத்தியவர்! நான் பார்த்து வியந்த மனிதர்களில் அவரும் ஒருவர். இப்படி எல்லோர் வாழ்விலும் ஒரு ஒளியை ஏற்றிய ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் இந்தப்பதிவு!
இன்றைய மாணவர்களே நாளை நீங்கள் விஞ்ஞானியாகவோ பொறியாளராகவோ உயர்ந்தால் அதற்கு உந்துதல் தந்த பழைய ஆசிரியரை மறந்து விடாதீர்கள் ! இந்த ஆசிரியர் தினத்தில் நீங்கள் தந்த பரிசு பொருட்களும் , வாழ்த்துக்கள் மட்டுமே அவர்களை மகிழ்விக்காது நாளை நீங்கள் இவரால் கற்றுவிக்க பட்டீர் என்பதே மிகப்பெரிய பரிசாகும்!.
இந்நாளில் கற்றுவித்த பயிற்றுவித்த அனைத்து ஆசான்களுக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை சொல்லி சமர்ப்பிக்கிறேன் !
வணங்குதல்களுடன்!
ஒரு ஆசிரியையின் மகன் என்ற வகையில் உங்கள் பதிவை படித்ததில் பெருமை படுகிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி தம்பி , உன்னுடைய ஊக்கம் என்னை சிலிர்க்க வைக்கிறது. நன்றிகள் பல!
DeleteReally Nice boss :) keep it up:)
ReplyDeleteThank you Boss!
Deleteஉங்கள் பதிவு நன்றாக இருக்கிறது .... அதே நேரத்தில் நல்ல உதாரணங்கள் கொடுங்கள் மறக்க வேண்டாம்....எடுத்துக்காட்டாக, இந்த நேரத்தில் உங்கள் 10 வகுப்பு ஆசிரியர் பெயர் குறிப்பிட வேண்டும். singam
ReplyDeleteஅவருடைய அனுமதியின்றி எவ்வாறு அவர் பெயரை நான் பயன்படுத்த முடியும்! எனினும் திருத்திக்கொள்கிறேன் !
Deleteஎனது மறைந்த தாத்தாவை இந்த பதிவு நினைவூட்டுகிறது ! ஒரு சிறந்த ஆசிரியரை ஆயுள் உள்ளவரை எந்த ஒரு மாணவனும் மறக்க மாட்டான் என்பதற்கு சான்று அவரின் மறைவிற்கு வந்த நூற்றுக்கணக்கான அவரின் முன்னாள் மாணவர்கள்! உங்கள் எழுத்துக்கு வெகுவாக நான் அடிமை ஆகி வருகிறேன் என்பதே மிகைப்படுத்தப்படாத உண்மை :) தொடர்ந்து பதிவு செய்யுங்கள் !
ReplyDeleteஇந்தப் பதிவானது உங்களுடைய பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தால் அதற்காக மகிழ்ச்சியடைகிறேன்! உங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயல்கிறேன் !
Deleteநன்றிகள் நண்பா !
Very nice. I remembered my teachers after reading this.
ReplyDeleteமிக்க நன்றி!
Delete