Wednesday 6 November 2013

ஆரம்பம் MOVIE REVIEW


நண்பர்களே ! நலம் விரும்பிகளே! வணக்கம்தீபாவளி பண்டிகை-   தமிழ் சினிமாவின்   மிக முக்கியமான box office ! இம்முறை 3 திரைப்படங்கள். இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தல அஜித்தின் ஆரம்பம் தான் முதலில் வெளியானது! ஒரு திரைப்படத்துக்கு தலைப்பு இல்லாமல் trailer வெளியானது இதுவே முதல் முறை

கதை:

26/11  மும்பை தாக்குதலில் உயிர் நீத்த ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே அவர்களின் இறப்பை மைய கருத்தாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் ஆரம்பம்.  அவர்களின் இறப்புக்கு காரணமான பாதுகாப்பு கவச ஊழலை தட்டி கேட்கும் தனி மனித  போராட்டம் தான் ஆரம்பம்! இது ஒரு உண்மைச் சம்பவம் என்பது பலருக்கு தெரியவில்லை! (முழு விவரம் )

இது நாட்டை உலுக்கிய ஒரு முக்கிய ஊழல்தமிழ் சினிமா பார்த்து பழகிய revenge ஸ்டோரி தான், ஆனால் அதை படமாக்கிய விதத்தில் ஆரம்பம்  தீபாவளி ரேசில் முதலிடம் பிடிக்கிறதுபடத்துக்கு ஏற்பட்ட அபார எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததிலே ஆரம்பம் தனது வெற்றியை பதிவு செய்துவிட்டது!  


படம் முதல் 6 நாள் வசூல் 60 கோடியாம், அதற்கு ஒரே காரணம் அஜித்! படத்தின் முதுகெலும்பே தல தான்! Screen Presence என்றால் என்ன என்பதற்கு தனி பாடமே எடுத்து விட்டார் தல. AK எனும் கேரக்டர் அஜித்துக்கு, வில்லனிசம், ஹீரோயிசம் நண்பனுடன் செண்டிமெண்ட் என தல ஆல் ஏரியாவிலும் கல்லா கட்டுகிறார். ஒரு சீன்ல enquiry  ஆபிசர் தல கையை பிடிப்பார், அப்ப அஜித் ஒரு ரியாக்சன் கொடுப்பார் பாருங்க! அரங்கமே அதிர்ந்தது! பல சண்டைகாட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார் தல!  நிச்சயம் தல ரசிகர்களுக்கு சரியான தீபாவளி விருந்து தான்!  படத்தின் இன்னொரு ஹீரோ ஆர்யா. ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி ஆக்சனிலும் தனித்தனி முகபாவனை! அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்கள் ஆர்யாவுக்கு! தெலுங்கு ரானா 10 நிமிடமே வந்தாலும் மிக நேர்த்தி!  நயன், டாப்சி  இரு நாயகிகளுமே கதைக்கு முக்கியமாக பயன்பட்டு இருக்கிறார்கள்! கிஷோர், அதுல் என கதாப்பாத்திரங்கள்  விரிகிறது. கதைக்கு இவர் தேவையில்லை என்றும் யாரையும் சொல்லத்தோணவில்லை 

இசை :

தலயின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் தான் இசை, பாடல்களில் செலுத்திய கவனத்தை பின்னணி இசையில் சற்று சறுக்கி விட்டார். சில இடங்களில் ஓகே!

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு :    

படம் பார்பதற்கு மிக பிரமாண்டமாக இருக்க முக்கிய காரணம் ஒளிப்பதிவு, lighting ல் பல இடங்களில் PC ஸ்ரீராம் நினைவுபடுத்தியது! அந்த இடைவேளைக்கு முந்தய காட்சியில் அஜித்துக்கும்  போலீசுக்கும் நடக்கும் ஆக்சன் sequence   படமாக்கிய விதம், ஹோலி பாடலை படமாக்கிய விதங்களில் ஒளிப்பதிவாளர் தன்னை நிலை நிறுத்துகிறார் .சுருக்கமாக சொன்னால்  Technically Slick ! தேசிய விருது படத்தொகுப்பாளர்,  2:30 மணி நேரம் தான் படம். கத்திரி வேலை, கதை சொன்ன போக்கு என படத்தொகுப்பாளரின்  பணி நச். அந்த முதல் பாதியில் வரும் ஆர்யா பகுதிகளை கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். டெக்னிகல் டிபார்ட்மெண்ட் First Class  With distinction தான்!

எழுத்து :

ஒரு உண்மைச் சம்பவத்தை புனைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது கதை. எழுத்தாளர்கள் சுபா வின் வசனங்கள் கதைக்கு மெருகேற்றுகிறது

"பொய் தான் பயப்படும், உண்மை பயப்படாது".    

"என்ன தான் டெக்னாலஜி வந்தாலும் கடைசியில் கைநாட்டு தான"

"Lets Make It Simple"

திரைக்கதை அபாரம்! அந்த முதல் இருபது நிமிடங்களுக்குப்பின்  திரைக்கதை வேகம் பின்னி எடுக்கிறது! குறிப்பாக இரண்டாம் பாதி சரியான வேகம்அஜித் ரசிகர்களின் நாடியை அறிந்த இயக்குனர்களில் ஒருவர் விஷ்ணுவர்தன். தலயை  மிகவும் கச்சிதமாக பயன்படுத்தியுள்ளார்.  படத்தில் அஜித் செய்யும் மேனரிசங்களில், தல ரசிகர்கள் ஆர்பரிக்கின்றனர். குறிப்பாக Tok Tok Tok moments, 

பலம் :

1.அஜித் 
2.விறு விறுப்பான திரைக்கதை 
3.Technical Department 
  
பலவீனம் :
1.லாஜிக் 

சமூகத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை ஒரு மாஸ் ஹீரோவை வைத்து துணிந்து  வெளிபடுத்திய எழுத்தாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் hats off! தேசப் பற்றை ஒரு உண்மைச் சம்பவம் மூலம் கூறியிருப்பது  பாராட்டத்தக்கது

இந்த தீபாவளியின் சரவெடி பட்டாசாய்  வெடித்திருப்பது தலயின் ஆக்சன் ஆரம்பம்.  கண்டிப்பாக எல்லா தரப்பினரும் காண வேண்டிய, பாராட்டப்படவேண்டிய  திரைப்படம்

ஆரம்பம் : சமூக சீர்கேட்டின் கலையெடுப்பின் ஆரம்பம்

மதிப்பெண் : 3.5/5


1 comment: