Thursday 22 August 2013

தலைவா View From a COMMON MAN:


இந்தப்பதிவின் மைய கருத்தை பதிவு செய்வதற்கு முன் முதலில் நன்றி சொல்லி துவங்குகிறேன்! என்னுடைய முதல் பதிவை பார்த்து Facebook மற்றும் வலைப்பதிவின் மூலம் தங்கள் கருத்தை பதிவு செய்த நண்பர்களுக்கு நன்றி



 துப்பாக்கியின் அபார வெற்றிக்குப்பின் வந்திருக்கிறது தலைவா! ஏக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் youtube ல் தலைவா trailer பார்த்திருக்கின்றனர்.அதை   பூர்த்தி செய்ததா தலைவா?

கதை :
தமிழ் சினிமா பார்த்த நாயகன் பாட்ஷா மாதிரியான Godfather டைப் திரைப்படம் தான் தலைவா!  "மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவர்களை வணங்கி"  என்று ஆரம்பமாகிறது படம்.   (சே குவேரா,விளாடிமிர் லெனின், பிடல் காஸ்ட்ரோ படங்கள் பின்னால் ஓடுகிறது ) 


படத்தின் மிகப்பெரிய பலம் விஜய்! முதல் பாதியில் டான்சர் ஆக பிற்பாதியில் விஸ்வா பாய் ஆகவும்  தோன்றுகிறார்,  டான்ஸ்,காமெடி என எல்லா ஏரியாவிலும்  புகுந்து விளையாடுகிறார்! குறிப்பாக தமிழ் பசங்க பாடல் ரசிகர்களுக்கு சரியான விருந்து!  மனிதர் இன்னும் 25 வயது இளைஞர் போல்இருக்கிறார். இவரும் சந்தானமும் அடிக்கும் லூட்டிகளுக்கு அரங்கம் அதிர்கிறது. சந்தானத்தின் one liners  வழக்கம் போல் ஒரே வார்த்தையில் "செம!". சத்யராஜ்க்கு  முற்றிலும் மாறுபட்ட வேடம். அவருக்கும் விஜய்க்கும் இடையிலான காட்சிகளை  இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம். இடைவேளைக்கு முந்தைய விஜய்-சத்யராஜ் சந்திக்கும் காட்சி மிகநேர்த்தி!   படத்தின் இன்னொரு ஹீரோ ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா  ஆஸ்திரேலியாவையும் மும்பையும் அழகாக கண் முன் நிறுத்துகிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு simply Class! பாடல்களில் பட்டய கிளப்பிய GV பின்னணி இசையில் கோட்டை விட்டுவிட்டார்.  "ஒரு தடவ கைக்கு கத்தி வந்துட்டா...",  "தலைவன்  ங்கறது நாம தேடி போறது இல்ல...." என ஆங்காங்கே பளிச்சிடுகிறது வசனங்கள்


ஆனால் இவையெல்லாம் சரியாக இருந்தால் மட்டும்  போதுமாஒரு படத்துக்கு அச்சாணியாக இருக்க வேண்டியது திரைக்கதை தான். ஆனால் AL விஜய் அதில் டக் அவுட் ஆகி விட்டார்.  பெரும்பாலான  காட்சிகளுமே  inspired (அப்படித்தான் bro சொல்றாங்க)  தான். குறிப்பாக விஜய், விஸ்வா பாய் ஆக மாறும் (Transformation Scene ) காட்சியில் ஒரு பஞ்ச்  இல்லை. இடைவேளை ட்விஸ்ட் ஓகே தான் ஆனால் பொன்வண்ணனின் கதாபாத்திரத்தின் ட்விஸ்ட் ஏற்றுகொள்ள முடியவில்லை.  படத்தின் மற்றொரு குறை என எனக்கு தென்பட்டது படத்தொகுப்பு தான். படத்தில் இன்னும்  1/2 மணி நேரமாவது  கத்திரி போட்டிருக்கலாம். 3 மணி நேரம் 2 நிமிடம் 32 வினாடிகள் எல்லாம் ரொம்ப அதிகம் bro! முதல் பாதி அமலாபால் ஓகே! ஆனால் பிற்பாதி ப்ப்பா.... ! "ராமு ராமு  என்று தியானம் செய்யும் வில்லனை பார்த்தால் ....முடியல bro! இடைவேளை ட்விஸ்ட் முடிந்தவுடன் படம் எப்படி நகர போகிறது என்று மிக ஆர்வமுடன் உள்ளே சென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சியது . ஆரவாரம் செய்ய வேண்டிய கதைத்தளத்தை எடுத்து கொண்டு பிற்பாதியில் அந்த கனத்தை தக்க வைக்க இயக்குனர் தவறி விட்டார்

பலம் :
1.விஜய் 
2.ஒளிப்பதிவு 

பலவீனம் :
1.திரைக்கதை 
2.இரண்டாம் பாதி 
3.வில்லன் 

ஒட்டுமொத்தமாக எவ்வித எதிர்பார்ப்புமின்றி சென்றால் ஒரு முறை  பார்க்கலாம்!

மதிப்பெண்  : 2.75/5