படத்தை தியேட்டரில் பார்த்துக்கொண்டிருக்கும் போதே தோன்றியது, நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு உணர்வுப்பூர்வமான காட்சிகள் இவை என்று!
கதை : இருவரின் காதல் தோல்விக்குப்பின் தொடங்கும் மன வாழ்க்கை? கதை என்னவோ ஒருவரி தான் அதை படமாக்கிய விதமும், காட்சிகளை மெருகேற்றிய விதத்திலும் அறிமுக இயக்குனர் அட்லி கவனிக்க வைக்கிறார்! காட்சிகளில் சில இடங்களில் மௌன ராகம், சில்லுனு ஒரு காதல் தாக்கம் இருந்தாலும், அதையெல்லாம் மறக்க வைக்கிறது இயக்குனரின் உழைப்பு!
கதாபாத்திரங்களின் அமைப்பு :
முதல் பாதியில் வரும் ஜெய் -நயன்தாரா காட்சிகள் class! முதல் பாதியில் இவர் தான் ஹீரோ! ஜெய்யின் கதாப்பாத்திரத்தின் அமைப்பு வெகுளியாக பாவிக்கப் பட்டிருந்தாலும் அவரின் வசன உச்சரிப்பு, உடல் மொழி என அனைத்திலும் வசீகரம்.நயன்தாரா- அவருடைய career லயே இது முக்கியமான படம், குறிப்பாக அந்த இடைவேளைக்கு முன் வரும் ஒரு 15 நிமிட காட்சிகளில் பட படக்கிறது. அதே பிற்பாதியில் ஆர்யா -நஸ்ரியா வின் காதல் காட்சிகளில் விரிகிறது திரைக்கதை. ஆர்யா -துரு துரு இளைஞன், பேமிலி மேன் என இரு பாத்திரத்திலும் கச்சிதம்! நேரம் பட புகழ் நஸ்ரியாவை கண்டவுடன் அரங்கில் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு! ப்ரதர்...ப்ரதர் ...ப்ரதர் என்று துரு துரு நஸ்ரியாவின் முடிவு அதிர்ச்சி! எனக்கு படத்தில் பிடித்ததே ஆர்யா-நஸ்ரியா கெமிஸ்ட்ரி தான்! படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் சந்தானம், இந்தப்படத்தில் சந்தானம் காமெடியன் மட்டும் அல்லாமல் சிறந்த குணசித்திர நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். சந்தானத்தின் one liners பற்றி சொல்லத் தேவையில்லை..அவருடைய காமெடி track, படத்தின் திரைக்கதையோடு ஒன்றி வருகிறது. மற்றபடி படத்தின் மிகப்பெரிய பலமே கதாபாத்திரங்கள் தான்! எல்லோருமே தங்கள் பணியை செவ்வென செய்திருக்கின்றனர்.
இசை, ஒளிப்பதிவு & படத்தொகுப்பு :
பாடல்களும் அதை படமாக்கிய விதமும் நன்றாக உள்ளது, ஆனால் ஒரே music ஐ வைத்துக்கொண்டு ஒரு படத்துக்கே bgm போட்டது GV மட்டும் தான்! காட்சிகளின் பிரமாண்டம் ஒளிப்பதிவில் தெரிகிறது. பாடல் காட்சிகளிலும் அதே உணர்வு. கதை சொன்ன விதம் என படத்தொகுப்பாளர் பங்கு சிறப்பாக இருந்தாலும் படத்தின் நீளம் சற்று குறைக்கப்பட்டிருக்கலாம். நஸ்ரியாவின் விபத்துக் காட்சியை படமாக்கிய விதம் நோ சான்ஸ்.
எழுத்து:
படத்தின் தூண் வசனங்கள் தான்,
"நா அழல, கண் வேர்க்குது...
யாருமே பொறக்கும் போது made for each other இல்ல, வாழ்ந்து காட்டுறது ல தான்..."
இப்படி பல காட்சிகளை ஆழமாக பதிய வைப்பது வசனங்கள் தான். இந்த one liner கதையை இழுத்து செல்வதே திரைக்கதை தான், காட்சிகளில் இயக்குனரின் மெனக்கெடல் தனியாக தெரிகிறது. முதல் பாதியில் இருந்த விறு விறுப்பு இரண்டாம் பாதியில் சற்று குறைகிறது, அதே போல் நஸ்ரியாவின் முடிவு யூகிக்க கூடிய ஒன்று, ஒரு காட்சியில் ஆர்யா -நயன் கண்ணாடி முன்னே நிற்கும் காட்சியில் தென்பட்டது டைரக்டர் டச். படத்தின் உண்மையான ஹீரோ அட்லி தான்.
பலம் :
1. கதாபாத்திரங்கள் அமைப்பு
2. எதார்த்தமான கதைத்தளம்
3.வசனங்கள்
படத்தின் குறை என்றும் ஏதும் பெரிதாக படவில்லை, பிற்பாதியில் வரும் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம் உண்மையில் இப்படி ஒரு உணர்வுப்ப் பூர்வமான ரொமாண்டிக் படம் எடுத்ததற்கு இயக்குனரை பாராட்டி ஆக வேண்டும்! கண்டிப்பாக இளைஞர்களுக்கும் , குடும்பங்களுக்கும் பிடித்த படமாக அமையும். நிச்சயமாக உங்களை சிரிக்க வைக்கிற, feel பன்ன வைக்கிற மகிழ்ச்சியான படமாக இது இருக்கும்!
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் அட்லியும் இணைகிறார்!
மதிப்பெண் : 3.25/5