Tuesday, 31 December 2013

தமிழ் சினிமா -2013

சிறந்த திரைப்படம் - பரதேசி, ராஜா ராணி


சிறந்த இயக்குனர் - பாலா (பரதேசி), கமல்ஹாசன் (விஸ்வரூபம்)

சிறந்த நடிகர் - தனுஷ்(மரியான் ), அதர்வா (பரதேசி), விஷால்(பாண்டிய நாடு)

சிறந்த நடிகை - பார்வதி மேனன் (மரியான்)

சிறந்த துணை நடிகர் - பாரதி ராஜா (பாண்டிய நாடு)

சிறந்த துணை நடிகை-  சிநேகா (ஹரிதாஸ்)

சிறந்த வில்லன் - ஜான் விஜய்(விடியும் முன்), வம்சிகிருஷ்ணா (இவன் வேற மாதிரி), 

சிறந்த நகைச்சுவை நடிகர் - சந்தானம், சூரி,சிம்ஹா (சூதுகவ்வும்)  

சிறந்த புதுமுக நடிகர் -  கௌதம் கார்த்திக் 

சிறந்த புதுமுக நடிகை - நஸ்ரியா, ஸ்ரீ திவ்யா  

சிறந்த புதுமுக இயக்குனர் -  அட்லி (ராஜா ராணி)

சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர். ரகுமான்  

சிறந்த பின்னணி இசை -  ஏ.ஆர். ரகுமான்  (மரியான்)

சிறந்த ஒளிப்பதிவாளர் - மார்க் கோனின்க்ஸ் (மரியான்)

சிறந்த படத்தொகுப்பாளர் -   மகேஷ்நாராயணன்(விஸ்வரூபம்), கிஷோர் T.E.(பரதேசி, உதயம்), ஸ்ரீகர் பிரசாத்(ஆரம்பம்) 

சிறந்த கலை இயக்குனர் -  பாலச்சந்தர் (பரதேசி), லால்குடி இளையராஜா (விஸ்வரூபம்).

சிறந்த கதை ,திரைக்கதை - மிஷ்க்கின் (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்), நலன் குமாரசாமி (சூதுகவ்வும்)

சிறந்த வசனகர்த்தா - ராஜேஷ் (வருத்தப்படாத வாலிபர் சங்கம்), சுபா (ஆரம்பம்)

சிறந்த நடன இயக்குனர் - பிர்ஜு மகாராஜ் (விஸ்வரூபம்-உன்னை காணாத),ஸ்ரீதர் (தமிழ் பசங்க- தலைவா)

சிறந்த சண்டைப்பயிற்சியாளர் - லீ விட்டேக்கர் (விஸ்வரூபம் & ஆரம்பம்), ராஜசேகர் (ஆதி பகவன்)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - பூர்ணிமா ராமசாமி (பரதேசி), அணு வர்தன் (ஆரம்பம்)





புத்தாண்டு வாழ்த்துக்களுடன் !


20 சிறந்த பாடல்கள் - 2013

1.நெஞ்சுக்குள்ள (கடல்)
2.மூங்கில் தோட்டம் (கடல்)
3.அவத்த பையா (பரதேசி)
4.வெளிச்சப்பூவே (எதிர்நீச்சல்)
5.காதல் என்னுள்ளே வந்த (​நேரம் )
6.இன்னும் கொஞ்ச நேரம் (மரியான் )
7.தமிழ் பசங்க (தலைவா )
8.யார் இந்த சாலையோரம் (தலைவா )
9.ஆனந்த யாழை (தங்க மீன்கள் )
10.பாக்காத பாக்காத (வருத்தப்படாத வாலிபர் சங்கம் )
11.அங்காதே (ராஜா ராணி )
12.தேனி காத்தோட (வணக்கம் சென்னை )
13.ப்ரே பண்ணுவேன் (இதற்கு தானாய் ஆசைபட்டாய் பாலகுமாரா )
14.மேலால வெடிக்குது (ஆரம்பம் )
15.ஸ்டைலிஷ் தமிழச்சி (ஆரம்பம் )
16.கனிமொழியே.. (இரண்டாம் உலகம் )
17.மன்னவனே.. (இரண்டாம் உலகம் )
18.வான் எங்கும் நீ மின்ன (என்றென்றும் புன்னகை )
19.பிரியாணி (பிரியாணி )
20.ஒர கண்ணால (உதயம் )

 

அதிக முறை கேட்டவை :
1.மூங்கில் தோட்டம் (கடல்)
2.ஆனந்த யாழை (தங்க மீன்கள் )
3.இன்னும் கொஞ்ச நேரம் (மரியான்)


சிறந்த ஆல்பம் :
கடல் 

சிறந்த பாடகர் :
ஸ்ரீ ராம் பார்த்தசாரதி (ஆனந்த யாழை- தங்க மீன்கள்)


சிறந்த பாடகி :
சக்தி ஸ்ரீ கோபாலன் (நெஞ்சுக்குள்ள-கடல் & more)


சிறந்த இசையமைப்பாளர் :
.ஆர்.ரகுமான் (கடல்,மரியான்)



Tuesday, 24 December 2013

மாற்றான் ?

யாரேனும் ஒரு தலைவன் இதை மாற்ற வர மாட்டானா என்று ஏங்கும் நெஞ்சம் இங்கு அதிகம், ஏங்கும் நெஞ்சங்கள் எல்லாம் களப்பணியாற்றிட தயங்குகிற தருணத்தில் துணிந்து களத்தில் இறங்கி தலைநகரை  அதிர வைத்துள்ளது இந்தப்புயல்! தன்னுடைய சுய வாழ்வின் சுக துக்கங்களை மறந்து பொது வாழ்வில் தன்னை அர்பணித்து கொள்பவனே தலைவன். குடியரசு இந்தியாவில் கேஜ்ரிவாலுக்கு கிடைத்த இந்த வெற்றி ஒரு சாதாரண குடிமகனின் வெற்றி! 15 ஆண்டுகளாக தலைநகரை ஆண்ட ஷீலா தீட்ஷித் அவர்களை 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட விரோதங்கள்  இல்லை, இது சாதாரண மனிதனின் வெற்றி என்று எளிமையாக கூறிய போதே இத்தேசத்தின் பாமரக் குடிமகனின் இதயங்களை வென்று விட்டார் கேஜ்ரிவால்


ஆம், தலைநகர் மாறிவிட்டது! ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தவரும், வலுவான லோக்பாலை நிறைவேற்ற குரல் கொடுத்த கேஜ்ரிவால் இன்று டெல்லியின் முதலமைச்சர் பதவிக்கு மிக அருகில்! நவம்பர் 2012ல் கட்சி, டிசம்பர் 2013 ல் ஆட்சியமைக்கும் சூழல்! 28 ஆம் ஆத்மி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்! டெல்லி சட்டசபை உறுப்பினர்களின் சராசரி வயது 45.  நாட்டின் மிக இளம் சட்டசபை ஆகி விட்டது டெல்லி சட்டசபைநாட்டின் இரு பெரு திமிங்கலங்களை திணறடித்து இன்று தலைநகரில் ஆட்சிக்கொடியை ஏற்ற தயாராகி விட்டார்!


இவர் யாரென்றே தெரியாத எனக்கு, அவரை பற்றி அறிந்து கொள்ள முற்பட்ட போது கிடைத்த சில தகவல்கள், "நாட்டின் உயரிய கல்வி நிறுவனமான ஐஐடியில் கல்வி கற்று, பின் தலைநகரிலே அரசு அலுவலகத்திலே வருவாய்த்துறையில் பணிபுரிந்துள்ளார்என்பது ! அதுமட்டும் அல்ல உயர் நடுத்தர வர்க்க குடும்பத்தை சார்ந்தவர் (Upper Middle- Class) என்பதும். அரசுப்பணியில் வெளிப்படையின்மையை உணர்ந்த கேஜ்ரிவால் தகவல் அறியும் உரிமை சட்டத்தை கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பதையும் உணர்த்தியது அந்த தொகுப்பு! இந்திய குடியரசில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த அளவு இன்றியமையாதது என்பதை அறிந்து கொள்ள -->(முழு விவரம்) (மேலும் )


ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து இவர் கைது செய்ய பட்டார்! அப்போது ஒரு காங்.செய்தி தொடர்பாளர் கூறினார் "முதலில் கேஜ்ரிவால் ஒட்டு வாங்கி மக்கள் உறுப்பினர் ஆகட்டும்" என்றுஆனால் இன்று ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவை தருகிறது அக்கட்சி! புதிய வாக்காளர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என்று கேஜ்ரிவாலின் விசிறிகள் எண்ணிக்கை கணக்கில் இல்லை! உண்மையில் கேஜ்ரிவால் சாதித்தது என்ன? அரசியலுக்கு வந்த ஓராண்டில் காத்திருக்கும் முதலமைச்சர் பதவி! சினிமாவில் மட்டுமே சாத்தியமானதை நிஜத்தில் சாதித்து விட்டார்! காங்.-பாஜக. இரு கட்சிகளை எதிர்த்து  போட்டியிட்டு 40% சதவிகித இடங்களை வென்றது! தன்னிடம் தனிப்பெரும்பான்மை இல்லாதவரை ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தது! வலுக்கட்டாயமாக காங்.ஆதரவளித்த போதும், மக்களிடம் SMS மற்றும் இனையதளம்  வாயிலாக கருத்து கேட்டது! காவல்த்துறை சிறப்பு பாதுகாப்பை வேண்டாமென்று என்று ஒதுக்கி,  தான் ஒரு சராசரி மனிதன் என்று உணர்த்துவது. ஆட்சி பொறுப்பேற்ற 15 நாளில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற போவதாக அறிவித்துள்ளது! இதை சாதனைகள் என்று கூறுவதை விட ஒரு மாற்று அரசியலுக்கான பாதை என்று உணர வைத்துள்ளார்


இரு பெரிய கட்சிகளுக்கு  வாக்களித்து ஒய்ந்த மக்கள் இன்று இவரை ஒரு மாற்றாக தேர்ந்தெடுத்துள்ளனர்! சிறந்த கல்வியாளன், ஒரு சாதாரண அரசு ஊழியன் இதெல்லாமும் கூட அதற்குக் காரணமாகக் சொல்லலாம். காங். உடன் மறைமுக கூட்டணி என்று சாடும் பாஜக. 'நிபந்தனையற்ற ஆதரவில்' மாறி மாறி பேசும் காங்.தலைவர்கள்.  நிபந்தனையற்ற ஆதரவை அளித்து டெல்லிக்குள் முடக்க நினைக்கும் தேசிய கட்சிகள்.  இதையெல்லாம் சமாளித்து தலைநகர மக்களுக்கு நல்லாட்சி தந்து  ஒரு மாற்றானாக உருவெடுப்பாரா இந்த  Common Man (ஆம் ஆத்மி)? களமும் காலமும் பதில் கூறட்டும்! காத்திருப்போம் 

உங்களுடன் ..
-பாமரக் குடிமகன்